மகள்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய புகாரில் 50 வயது தந்தை கைது

இலங்கையில் 6 மற்றும் 8 வயதான தனது மகள்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் குற்றத்தின் பேரில் 50 வயதான தந்தை போலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மஞ்சந்தொடுவாய் என்னுமிடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறுமிகளின் தாயும் தந்தையும் ஏற்கனவே பிரிந்து வாழ்கின்றனர். தந்தை மறுமணம் செய்துள்ள நிலையில் சிறுமிகள் தாயுடன் வசித்து வருவதாக விசாரனைகளை நடத்தி வரும் காத்தான்குடி போலிஸார் தெரிவிக்கின்றனர்.

தந்தை தங்களை அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமிகள் தாயிடம் தெரிவித்த நிலையில், அவர் போலிஸில் புகார் அளித்திருக்கிறார். சிறுமிகள் இருவரும் தங்களுக்கு நடந்ததை போலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

போலிஸாரால் கைது செய்யப்பட்ட தந்தை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

தந்தையையும் சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி எதிர்வரும் 8ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு போலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி எம்.கணேசராஜா, சந்தேக நபரான தந்தையை அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறும்உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:'

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :