இலங்கை: முல்லைத்தீவு காணிகளை விடுவிக்க ராணுவம் இணக்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாபிளவு பகுதியில் அரச பாதுகாப்புப் படையினர் வசம் இருக்கின்ற 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு ராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இலங்கை ராணுவம். (கோப்பு படம்)

தற்போது சம்பந்தப்பட்ட நிலங்களில் ராணுவ முகாமொன்று காணப்படுகின்ற காரணத்தினால் அந்த நிலத்தை விடுவிப்பதற்காக, அந்த ராணுவ முகாமை வேறொரு இடத்துக்கு மாற்றும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கிடு செய்யுமாறு தான் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாண அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கேப்பாபிளவு பகுதியில் அரச பாதுகாப்புப் படையினர் வசம் இருக்கின்ற தனியார் காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் பின்னர் அரச பாதுகாப்பு படையினர் வசம் இருந்த 432 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்