இலங்கை: தலதா அத்துக்கோரளவை நீதி அமைச்சராக்கியதற்கு எதிர்ப்பு

  • 26 ஆகஸ்ட் 2017
தலத்தா அத்துக்கோரள

இலங்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோரளவை நீதி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை கண்டிப்பதாக கூட்டு எதிர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக கடமையாற்றிய போது நிதி மோசடியில் ஈடுபட்டதாக விசாரணை ஆணைக்குழு முன்பு கூட்டு எதிர்க்கட்சியினர் புகார் சமர்ப்பித்திருப்பதாக எதிர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தலதா அத்துக்கோராளவை நீதி அமைச்சராக நியமித்ததன் மூலம் அந்தப் பதவி மீது மக்கள் வைத்திருக்கும் கவுரவம் மற்றும் நம்பிக்கை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள புதிய நீதி அமைச்சர் தலதா தனக்கு எதிராக ஊழல் விசாரணை ஆணைக்குழு இதுவரை எந்தவொரு விசாரணையையும் ஆரம்பிக்கவில்லை என்று கூறினார்.

நீதி அமைச்சு தனது பணிகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதை தடுப்பதற்க்காகவே கூட்டு எதிர் கட்சியினர் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்