இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜெயசூர்ய மீது தென் அமெரிக்காவில் வழக்கு

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய மீது பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்கா நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption போரில் இறுதி கட்டங்களில் ராணுவ தளபதியாக செயல்பட்ட ஜகத் ஜெயசூர்ய (நடுவில் இருப்பவர்)

இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டில், பிரிவினைவாத தமிழ் போராளி குழுக்களுடன் நடந்த உள்நாட்டு போரின் இறுதி கட்டங்களில் ராணுவ தளபதியாக ஜகத் ஜெயசூர்ய செயல்பட்டார்.

பல ஆயிரக்கணக்கான இலங்கை தமிழ் குடிமக்கள் மற்றும் போராளி குழுவின் தலைமை ஆகியோர் இந்த மோதலின் இறுதியில் கொல்லப்பட்டனர்.

போரின்போது நடந்த பல அட்டூழியங்கள் தொடர்பாக இலங்கை ராணுவம் மற்றும் போராளி அமைப்பு ஆகிய இரண்டின் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

ஜகத் ஜெயசூர்ய மீது குற்றம்சாட்டப்படுவது ஏன்?

பிரேசில், கொலம்பியா, பெரு, சிலி, அர்ஜென்டினா மற்றும் சுரீனம் போன்ற தென் அமெரிக்க நாடுகளுக்கான இலங்கை தூதரான ஜகத் ஜெயசூர்ய, இலங்கையின் வட கிழக்கு பகுதியில் இருந்த துருப்புகளுக்கு தலைமையேற்று இருந்தார்.

அவரின் தலைமையில் இருந்த படையினர் மீது மருத்துவமனைகளை தாக்கியதாகவும், ஆயிரக்கணக்கான குடிமக்களை கடத்தி கொடுமைப்படுத்தியதாகவும், கொன்றதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP

தூதராக இருப்பதால் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பாக பாதுகாப்பு மற்றும் விலக்கு ஜகத் ஜெயசூர்யவுக்கு இருந்தபோதிலும், இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பு, அவரை தூதர் பணியில் இருந்து நீக்கவும், அவர் மீது விசாரணை நடத்தவும் விரும்புகிறது.

''2007-2009 வரையிலான முக்கிய காலகட்டத்தில் வன்னி பகுதியில் நடந்த சம்பவங்களுக்கு அவர்தான் உண்மையில் பொறுப்பாவார்'' என்று சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பின் வழக்கறிஞரான யாஸ்மின் சூகா பிபிசியிடம் தெரிவித்தார்.

''ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில், பொதுமக்கள் மற்றும் போராளிகளை பிரித்து இனம் காணும் முறையை இலங்கை ராணுவம் பின்பற்றவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் விகிதாசார கேள்வி தொடர்பான சட்டத்தையும் மீறியுள்ளனர்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜகத் ஜெயசூர்ய மீது மேலும் பெரு, சில்லி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று இந்த குழு கூறியுள்ளது.

தற்போது ஜகத் ஜெயசூர்ய எங்கு உள்ளார்?

தனது தூதர் பணியை நிறைவு செய்துள்ள ஜகத் ஜெயசூர்ய, நாடு திரும்பி வந்துகொண்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று ஜகத் ஜெயசூர்ய கொழும்பு வந்து சேர்வார் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

''பிரேசிலில் இருந்து ஜகத் ஜெயசூர்ய இலங்கை வருவது ஏற்கனவே திட்டமிடப்பட்டது. சில ஊடகங்களில் கூறியுள்ளபடி அவர் தப்பித்து செல்லவில்லை'' என இலங்கை வெளிநாட்டு அமைச்சக பேச்சாளரான மஹிஷிணி கொலினி பிபிசி சிங்கள சேவைப்பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

''தன் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் தகவல் அறிந்த ஜகத் ஜெயசூர்ய, பிரேசிலில் இருப்பதை தவிர்த்துவிட்டார். அவர் இருக்குமிடம் தொடர்பாக நாங்கள் கண்காணித்து வந்தோம். எங்களுக்கு கிடைத்த நம்பக தகவல்களின்படி துபாய் செல்லும் நேரடி விமானத்தில் அவர் சென்றுள்ளார்'' என்று சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பின் வழக்கறிஞரான யாஸ்மின் சூகா தெரிவித்தார்.

ஜகத் ஜெயசூர்ய மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமா?

படத்தின் காப்புரிமை PA
Image caption சிலி ராணுவ தளபதி பினோசெட்

உலகில் பல அதிகார வரம்புகள் எங்கும் சர்வதேச வழக்குப்பதிவுகள் சிக்கலானதாக உள்ளது.

ஜகத் ஜெயசூர்ய மீதான வழக்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஒருங்கணிப்பு பணி மேற்கொண்ட கார்லஸ் பெர்னாண்டஸ், முன்னதாக சிலி நாட்டு ராணுவ தளபதி பினோசெட் மற்றும் அர்ஜென்டினா ராணுவ தளபதி ரஃபைல் விடேலா ஆகியோர் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார்.

தான் ஸ்பெயினுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக பினோசெட், லண்டனில் 18 மாதங்கள் காவலில் இருந்தார்.

தூதராக இருக்கும் வரை ஜகத் ஜெயசூர்யவுக்கு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவித்த சூகா, ''அவர் பதவியில் இருந்து விலகி பின்னர் அப்பாதுகாப்பு அவருக்கு இருக்காது என்று தெரிவித்தார்.

இது குறித்த தகவல்களை பெற இலங்கை வெளிநாட்டு அமைச்சகத்தை பிபிசி அணுகிய போது, இது தொடர்பான அரசாங்க பேச்சாளர் எந்த இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இலங்கை போரினால் ஏற்பட்ட இழப்பு

26 ஆண்டுகளாக நடந்த இலங்கை உள்நாட்டு போரில் இரு தரப்பிலும் குறைந்தது 1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைக்காக தங்கள் போராடியதாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை AFP

போரின் கடைசி மாதங்களில் ஆயிரம் குடிமக்களின் இறந்த பல எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

ஏராளமானோர் கொல்லப்பட்டதற்கு காரணமாக அமைந்த ஷெல் குண்டு தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடத்தியதாக இலங்கை அரசு படைகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதேவேளையில்,போரின் போது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும், தப்பிச்செல்ல முயன்றவர்களை சுட்டதாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது குற்றம்சாட்டப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :