கொழும்பு நகருக்குள் படகு போக்குவரத்து சேவை தொடங்க திட்டம்

  • 1 செப்டம்பர் 2017

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொழும்பு நகருக்குள் ஓடுகின்ற கால்வாய்களில் படகுகள் மூலம் பொது மக்கள் போக்குவரத்து சேவையை தொடங்க இருப்பதாக இலங்கை நகர அபிவிருத்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Pool/Getty Images
Image caption கோப்புப்படம்

கொழும்பு நகருக்குள் 44 கால்வாய்கள் உள்ளதாக இந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கால்வாய்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதால், படகு போக்குவரத்து சேவையை எளிதாக நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கொழும்பு ,வெல்லவத்தை முதல் பத்தரமுல்லை வரை படகு போக்குவரத்து சேவை நடத்தப்படும்.

அதேபோன்று கொழும்பு முதல் தெஹிவளை வரையும், கொழும்பு முதல் களனி வரையும் படகு போக்குவரத்து சேவைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்க்காக கால்வாய்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ள இந்த அமைச்சகம் எதிர்காலத்தில் கொழும்பு நகரில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு படகு போக்குவரத்து சேவை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

இந்த திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் மூலம் பொது போக்குவரத்து சேவைகளில் காணப்படும் மக்கள் நெரிசலை பெருமளவு குறைக்க முடியுமென்று சுற்றிக்காட்டியுள்ள இந்த அமைச்சகம், பிரதான பாதைகளில் காணப்படும் அதிக வாகன நெரிசலையும் பெருமளவு குறைக்க முடியுமென்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் கால்வாய்களை பயன்படுத்தி பொது மக்கள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்க இருப்பது இதுவே முதல்முறை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்