இலங்கை : துணை அமைச்சர் அருந்திக்க பதவி நீக்கம்

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரத் துணை அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ ஜனாதிபதியினால் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அருந்திக
படக்குறிப்பு,

அருந்திக

இந்த பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகின்றது

அரசியலமைப்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதியினால் இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை தற்போதைய அரசாங்கத்தில் முதல் தடவையாக அமைச்சர் அல்லது துணை அமைச்சரொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்ணான்டோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியை சேர்ந்த இவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த அரசு தொடர்பாக அண்மைக்காலமாக அதிருப்தியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என கூறப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை ஐ.ம.சு.முன்னனி விலக்கிக் கொள்வது தொடர்பாகவும் கருத்துக்களை கொண்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

காணொளிக் குறிப்பு,

இர்மா சூறாவளி: கிடைத்ததை கொள்ளையடிக்கும் மக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :