இலங்கை கிரிக்கெட் மைதானத்தில் இருந்து முரளீதரன் பெயர் நீக்கம்

முத்தையா முரளீதரன் (வலது)

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images

படக்குறிப்பு,

முத்தையா முரளீதரன் (வலது)

இலங்கையில் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முன்னாள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் அகற்றப்பட்டுள்ளதாக அவரது தந்தை சி.முத்தையா தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த முத்தையா இதற்கான தீர்வை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இந்த மைதானத்திற்கு முத்தையா முரளிதரன் பெயர் வைக்கப்பட்டது.

தற்போது அந்த மைதானத்தில் இருந்து தனது மகனின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக முத்தையா முரளிதரனின் தந்தை கூறுகின்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடி இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருவதாக மகாநாயக்க தேரர் தம்மிடம் கூறியதாகவும் முத்தையா கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :