மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்: இலங்கை கல்வி அமைச்சக அதிகாரி மறுப்பு

பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் ஊக்குவிக்கப் பட வேண்டும்.
Image caption பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் ஊக்குவிக்கப் பட வேண்டும்.

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் பாடசாலை செல்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சரினால் எந்தவொரு கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என கல்வி அமைச்சகத்தின் ஊடகச் செயலாளர் கல்ப குனரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபா 100 என கொடுப்பணவு வழங்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழ் உள்பட பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனை மறுத்துள்ள கல்ப குனரத்ன, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சரினால் இந்த கொடுப்பணவு பற்றி கருத்து கூறப்படவில்லை என்று தெரிவித்தார்.

பொருளாதார பிரச்சனை காரணமாக பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களின் கல்வி ஊக்குவிக்கப் பட வேண்டும் என்பது அமைச்சரின் கருத்தாகும் என்றும் இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்