இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா?

இலங்கை டி 20 படத்தின் காப்புரிமை ICC

இலங்கை டி 20 அணியின் கேப்டன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என பிபிசி சிங்கள சேவைக்கு தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கூறியிருந்தது.

அக்டோபர் 29-ம் தேதி லாகூர் கடாபி மைதானத்தில் நடக்க உள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளது.

ஆனால் தரங்க ,சந்திமால், மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி விளையாட மறுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் விளைவாக, முழு டி20 தொடருக்கும் இவர்கள் இல்லாத ஒரு அணியை இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திசரா பெரேராவை இத்தொடருக்கான கேப்டனாக அறிவிக்க இலங்கை கிரிக்கெட் அணி பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானுக்கு பயணிக்கு முதல் சர்வதேச அணியாக தாங்கள் இருக்க விரும்பவில்லை எனவும், பிற அணிகள் முதலில் விளையாட வேண்டும் எனவும் சில மூத்த வீரர்கள் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவரான திலங்க சுமதிபாலவும் இலங்கை வீரர்களுடன் லாகூர் செல்ல உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்