இலங்கை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் மாயம்

ஆறு

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

(கோப்புப் படம்)

இலங்கையில் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மாத்தளை மாவட்டம் லக்கல பிரதேசத்திலுள்ள தெல்கமு ஓயா ஆற்றில் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரும் நீர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :