இலங்கை: சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோர் அதிகரிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

31 ஆயிரத்து 168 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 76 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் களுத்துறை மாவட்டத்தில் தான் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 29 . குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 545 பேர் இம்மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒருவர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

694 வீடுகள் முற்றாகவும், 25 ஆயிரத்து 117 வீடுகள் பகுதி அளவும் சேதமடைந்துள்ளன. சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள் 314 மற்றும் வர்த்தக முயற்சிகள் 47 இந்த சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

ஆயிரத்து 471 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 435 பேர், 66 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்