இலங்கை: யானை தாக்கிய பெல்லன்வில விமலரதன தேரர் காலமானார்

யானையொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெல்லன்வில ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் இன்று காலமானார்.

Image caption பெல்லன்வில விமலரதன தேரர்

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலமானார்.

விஹாரையில் வளர்க்கப்பட்டு வந்த மியன்குமார் என்றழைக்கப்படும் யானைக்கு உணவு வழங்க முயற்சித்த வேளையில் பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரரை அந்த யானை நேற்று வெள்ளிக்கிழமை தாக்கியிருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

பேராசிரியர் பெல்லன்வில விமலரதன தேரர், ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்