இலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ அணி முன்னிலை

இலங்கை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னணியில் திகழ்கிறது.

மகிந்த ராஜபக்ச

பட மூலாதாரம், Getty Images

இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று இரவே வெளியாகத்தொடங்கிவிடும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், அதற்கு மாறாக மிகவும் தாமதமாகவே அவை வெளிவரத் தொடங்கின. வாக்குகளை எண்ணும் பணிகளில் ஏற்பட்ட தாமதமே அதற்கு காரணம்.ஆயினும் இதுவரை வெளிவந்த முடிவுகளின்படி மஹிந்த ராஜபக்‌ஷ அணியினருக்கே அதிகப் படியான உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது இடத்தில் பிரதமரின் கட்சி:பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாவது இடத்திலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

ஆயினும் முழுமையான முடிவுகள் வெளியாக இன்னும் சிலமணி நேரம் பிடிக்கும்.

பட மூலாதாரம், Getty Images

வடக்கு கிழக்கு:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்றுள்ளது. ஆனாலும் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட பல சபைகளில் போதிய பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அந்தக் கட்சி ஆட்சியை அமைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :