இலங்கை: அமோனியா தாங்கி விபத்தில் 5 பேர் பலி

  • 19 ஏப்ரல் 2018
அமோனியா படத்தின் காப்புரிமை Thinkstock

இலங்கையில் உள்ள ஹொரணை பெலப்பிட்டியவில் ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா தாங்கியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

ரப்பர் தொழிற்சாலையின் அமோனியா தாங்கியில் தொழிலாளி ஒருவர் தவறுதலாக விழுந்துவிட, அவரும் அவரை மீட்க வந்த கிராமவாசிகளும் அமோனியா வாயுவால் மயக்கமடைந்தனர்.

பின்னர் அவர்கள் ஹொரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களில் 5 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய மேலும் பலர் மயக்கமடைந்துள்ளனர்.அமோனியா கழிவுகளை சேகரிக்கும் தாங்கியை துப்பரவு செய்ய முயன்ற போது அந்த தொழிலாளி அதில் விழுந்ததாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்