இலங்கை: தேர்தலில் வாக்களிக்காத தேர்தல் ஆணையாளர்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களை தெளிவூட்டும் நிகழ்வு ஜூன் 12 அன்று தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மகிந்த தேசப்பிரிய

இதில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய கலந்துகொண்டார்.

தெனியாய 51 வது சந்தியில் இருந்து மக்களை தெளிவூட்டும் முகமாக ஊர்வலம் தொடங்கி, தெனியாய மத்தேயு பாடசாலைவரையும் சென்று முடிவடைந்தது. மகிந்த தேசப்பிரிய உரையாற்றினார். பின்னர் மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

தேர்தல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சித்திரப் போட்டியின் போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

மற்றும் மாத்தறை தேர்தல் செயலகத்தினால் ஆணையாளருக்கு ஞாபக சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது. நிகழ்வில் 1000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

தேர்தலில் நீங்கள் வாக்களிப்பதில்லையா என இளைஞர் ஒருவர் கேட்டபோது, "யாரும் சிறையில் வைக்கப்பட்டு மரண தண்டணை விதிக்கப்படாவிட்டால், இலஞ்ச ஊழல் செயல்களுக்கு ஆளாகாது விட்டால், யாருடைய பெயரையும் வாக்காளர் இடாப்பில் இருந்து நீக்கமுடியாது. எனக்கு வாக்கு இருந்தது. ஆனால் நான் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து வாக்களிக்க வில்லை."

"அதாவது 2011 ஆம் ஆண்டில் இருந்து வாக்களிக்கவில்லை. நான் விரும்பினால் வாக்களிக்கலாம். ஆனால் கட்சி சார்பாக வாக்களித்தேன் என்று நினைப்பார்கள். வாக்களிக்காவிட்டாலும் இவர் தகுதியானவர் இல்லை என்று சொல்வார்கள். இதற்காகத்தான் நான் வாக்களிக்கப் போவதில்லை," என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்