இலங்கை: மாத்தறையில் கொள்ளையர்கள் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலி

  • 22 ஜூன் 2018

மாத்தறையில் கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இரு போலீசார் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தசம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடந்ததாக மாத்தறை போலீசார் தெரிவிக்கின்றனர்.

மாத்தறை உணுகொட்டுவ பகுதியிலுள்ள நகைக் கடையில் திருடர்கள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது கொள்ளையர்களைத் தடுக்க போலீசார் முயற்சித்த நிலையில் இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கி சூடு நடந்ததாகப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதில் மூன்று போலீசார் மற்றும் பொது மக்கள் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் கொள்ளையர்கள் தாம் பயணித்த மோட்டார் சைக்கிள் இரண்டையும் மாத்தறை நகர சபைத் தலைவரான ரஞ்சித் யசரத்ன என்பவரின் வீட்டிற்கு அருகில் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

ஒரு குழு இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட மாத்தறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் காயமடைந்து காலி கராபிட்டிய வைத்திய சாலைக்கு சென்று தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.

பிறகு இந்த மருத்துவமனையில் தேடுதல் மேற்கொண்ட காலி போலீசார் சந்தேகப்பட்டு அந்த நபரைக் கைது செய்து விசாரணை செய்தனர். இதையடுத்து இச்சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் நிழலுலகக் குழு ஒன்றின் தலைவரான கொஸ்கொட தாரக என்பவரும் அடக்கம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்