இலங்கை: 'காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை'

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான 500வது நாள் போராட்டத்தில் நிரந்தர தீர்வை கோரும் உறவுகள்

காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தேவையில்லை எனவும் தமக்கான நிரந்தரமான தீர்வு ஒன்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெற்றுத் தரவேண்டும் எனவு இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மாலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவர்கள் 108 தேங்காய்களை உடைத்தும், கற்பூர தீச்சட்டிகளை எடுத்தும் அவர்கள் தமது உறவுகளுக்காகப் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி வவுனியாவில் 500 நாள்களாக தொடர் போராட்டத்தை நடத்தும் உறவுகள் இன்று யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அடையாள உணவு தவிர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், காணாமல் போனோர் அலுவலகம் தமக்குத் தேவையில்லை என்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான தமது நம்பிக்கை இல்லாது போய்விட்டது எனவும் தெரிவித்ததுடன் தமக்கான நிரந்தரமான சுதந்திரனமான பாதுகாப்பான தீர்வு ஒன்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியமே பெற்றுத் தரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :