அறுகம்பே - இலங்கையிலுள்ள சர்ஃபிங் விளையாட்டின் சொர்க்கபுரி

அறுகம்பே - இலங்கையிலுள்ள சர்ஃபிங் விளையாட்டின் சொர்க்கபுரி

சி.என்.என் 2013இல் வெளியிட்ட சர்ஃபிங் செய்வதற்கான உலகின் சிறந்த 50 இடங்களில் அறுகம்பே இடம் பெற்றிருந்தது.

கடலலை நீர்ச் சறுக்கல் எனப்படும் சர்ஃபிங் விளையாட்டில் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம்பே கடலில் எழுகின்றன.

அறுகம்பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சர்ஃபிங் விளையாடுவதற்குரிய 10 இடங்கள் உள்ளன.

ஏப்ரல் முதல் அக்டொபர் வரையிலான மாதங்கள் இங்கு சர்ஃபிங் செய்ய ஏற்றதாக கூறப்படுகிறது.

அறுகம்பேயில் ஆண்டுதோறும் சர்வதேச அளவிலான சர்ஃபிங் போட்டி நடக்கிறது.

சர்ஃபிங் படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் வாசிகளுக்கு ஒரு தொழிலாகவே உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :