சர்வதேச போட்டியில் வென்ற இலங்கை அழகு கலை நிபுணர்

sri lanka

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்ற கயல்விழி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்த அவருக்கு, அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இவர் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த போட்டி கடந்த 10ஆம் நடந்தது. கடந்த 11ஆம் தேதி பரிசுகள் வழங்கப்பட்டன.

இலங்கையில் பிரசித்தி பெற்ற அழகு கலை நிபுணராக கயல்விழி, சர்வதேச ரீதியில் பல போட்டிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் நடந்த அழகு கலை போட்டியொன்றில் இலங்கையை சார்பில் பங்கேற்ற ஒருவர் பதக்கம் வென்றது ஏறத்தாழ இதுவே முதல் முறை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்