கொழும்பு கப்பல்தளத்தை இந்தியாவுக்கு தர மறுத்தது ரணிலை அகற்ற காரணமா?

கொழும்பு துறைமுகத்தில் மணலை அகற்றும் மண்வாரி கப்பல்.

பட மூலாதாரம், Getty Images

கொழும்பு மேற்கு கப்பல் தளத்தை இந்தியாவுக்குத் தருவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது பிரதமர் மாற்றத்துக்கான தாக்கத்தை செலுத்திய காரணங்களில் ஒன்று என இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த எம்.பி. நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திர கட்சி சார்பில் கொழும்புவில் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இவர், ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன-வை கொல்வதற்கான முயற்சி குறித்து உரிய விசாரணை முன்னெடுக்கப்படாததும் அக்கறை செலுத்தாதும் இந்த மாற்றத்துக்கான காரணிகளில் மற்றொன்று என்று நிமல் குறிப்பிட்டார்.

இந்த மாற்றம் குறித்து வெளிநாடுகளின் பார்வை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது வெளிநாட்டு தூதர்களுக்கு இதுபற்றி ஜனாதிபதி விளக்குவார் என்று சுதந்திர கட்சியின் மற்றொரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்:

காணொளிக் குறிப்பு,

இலங்கை அரசியலில் பரபரப்பு - யாழ்ப்பாண மக்கள் சொல்வதென்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :