இலங்கை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் அழைப்பு

இலங்கை படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை 14.11.2018 காலை 10 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கமைய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி கடந்த நவம்பர் 09ஆம் தேதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. இந்த இடைக்காலத் தடை வரும் டிசம்பர் 07ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னதாக, நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக அறிவத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்