இலங்கையின் தொடக்கப்பள்ளியில் “பேருந்து வகுப்பறை” ஏற்படுத்திய மாற்றம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை தொடக்கப் பள்ளியில் “பேருந்து வகுப்பறை” ஏற்படுத்திய மாற்றம்

  • 8 டிசம்பர் 2018

இலங்கையின் ஹோரானாவில் அமைந்துள்ள குருகோட தொடக்கப்பள்ளி அந்நாட்டின் கல்வித்துறையின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.

பழையதொரு பேருந்து வகுப்பறையாக பயன்படுத்தப்பட்டதுதான் இதற்கு காரணம்.

இந்த பள்ளியின் தலைமையாசிரியராக அஜித் பிரேமகுமார வந்தபோது, இந்த பள்ளியில் போதிய வகுப்பறை வசதிகள் இல்லை.

இந்த தலைமையாசிரியர் படைப்பாற்றல் மிக்க தமது கைவண்ணத்தால் அங்கிருந்த கைவிடப்பட்ட பழையதொரு பேருந்தை வகுப்பறையாக மாற்றி அதிக கவனத்தை ஈர்த்தார்.

இந்த பள்ளிக்கு தலைமையாசிரியராக வந்தபோது, முதலாம் வகுப்புக்கு எந்தவொரு மாணவரும் இல்லை.

இந்த மாற்றத்தால் அந்த பகுதியில், இப்பள்ளி அதிக கவனத்தை ஈர்த்தது. மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 51இல் இருந்து 250-ஆக அதிகரித்தது.

இப்போது, முதலாம் வகுப்பில் மட்டும் 30 மாணவர்கள் உள்ளனர். அஜித் பிரேமகுமார இப்போது இன்னொரு பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்