காத்தான்குடியில் சிக்கிய ஆயுதங்கள்: சட்டவிரோத ஆயுதங்களை போலீஸிடம் ஒப்படைக்க உத்தரவு

காத்தான்குடியில் சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட பொருட்கள்
Image caption கைப்பற்றப்பட்ட பொருட்கள்

இலங்கையின் காத்தான்குடியில் இன்று சனிக்கிழமை பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, மைக்ரோ துப்பாக்கி, தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப்படையினர், ராணுவம் மற்றும் காத்தான்குடி போலீஸார் இணைந்து, காத்தான்குடி மொஹிதீன் பள்ளிவாசல் மையவாடியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போதே, இந்த ஆயுதங்கள் சிக்கியதாகவும் காத்தான்குடி போலீஸார் கூறினார்.

மைக்ரோ பிஸ்டல் - 1, அதற்கான ரவைகள் - 6, ரவைக்கூடு - 1, கைக்குண்டுகள் - 2, தொலைத்தொடர்பு சாதனங்கள் - 2, அவற்றுக்கான சார்ஜர்கள் ஆகியவற்றுடன் வாள்களும், இங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.

அண்மையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சொந்த ஊர் காத்தான்குடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் வாள், கிறீஸ் கத்தி போன்றவற்றினை பொதுமக்கள் தம்வசம் வைத்திருந்தால், அவற்றினை அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் இன்று அல்லது நாளை ஒப்படைக்குமாறு, போலீஸார் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டாரா அஸ்ரிபா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :