இலங்கையின் சில மாவட்டங்களில் இன்றும் தொடர்கிறது ஊரடங்குச் சட்டம்

போலீஸ் படத்தின் காப்புரிமை Getty Images

புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கம்பஹா போலீஸ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இன்றிரவு மீண்டும் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றிரவு 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கம்பஹா போலீஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் தேதி ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாதிருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கடந்த திங்களன்று, இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது

என்ன நடந்தது?

இலங்கையில் புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கம்பஹா போலீஸ் பிரிவு ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்