புத்தளத்தில் பதற்றம்; பொலிஸ்காரர் பலி

  • 21 ஆகஸ்ட் 2011
பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பிபிசி தமிழ்

புத்தளத்தில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஞாயிறு இரவு இடம்பெற்ற சம்பவங்களில் பொலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சம்பவங்களில் காயமடைந்த பெண்ணொருவரும் 13 வயது பிள்ளையொன்றும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் க்ரீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக பரவிய பீதியே இந்த மோதலுக்கும் பதற்றத்துக்கும் காரணமாகியுள்ளது.