தனியார் பல்கலைக்கழக மசோதா:

இலங்கையில் உயர்கல்விச் சமூகத்தடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்டமூலத்தை கொண்டுவர முனைவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் குற்றஞ்சாட்டுகிறார்.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாடுகளின்றி அமையத்தொடங்கினால் அரச பல்கலைக்கழகங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் போக்குவரத்துத் துறை மற்றும் மருத்துவத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தான் இனி பல்கலைக்கழகம் சார் உயர்கல்வித் துறைக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிர்மால் ரஞ்சித் தெரிவித்தார்.

தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அக்கறை செலுத்தும் அரசாங்கம் அரச பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதியொதிக்கீட்டை வழங்க அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.