ஷிராணிக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் 'கறுப்பு வெள்ளி' போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜனவரி, 2013 - 10:41 ஜிஎம்டி
சட்டத்தரணிகள் ஷிராணிக்கு ஆதரவாக தொடர்ந்தும் குரல்கொடுத்துவருகின்றனர்

சட்டத்தரணிகள் ஷிராணிக்கு ஆதரவாக தொடர்ந்தும் குரல்கொடுத்துவருகின்றனர்

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான கண்டன பதவிநீக்க நடைமுறையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி கொழும்பு உச்சநீதிமன்றத்துக்கு முன்பு சட்டத்தரணிகள் போராட்டம் செய்துள்ளனர்.

கறுப்பு துணியை முகத்திலோ தலையிலோ அணிந்து தமது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.

சட்டத்தரணிகளுடைய தொடர்ப் போராட்டத்தின் பின்னணியில் சதி முயற்சி ஒன்று இருப்பதாக அரசாங்கம் கூறுவதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணி தவராசா மறுத்துள்ளார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டுமானால், நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தலைமை நீதியரசர் எதிரான நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள கண்டன பதவிநீக்க நடைமுறையில் தலைமை நீதிபதிக்கு நியாயமான விசாரணை கிடைக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ஜிஃப் அழகரட்ணம் கூறினார்.

நாடாளுமன்றம் பதவிநீக்க தீர்மானத்தை நிறைவேற்றினாலுங்கூட, நாடாளுமன்றத்தினுடைய நிலையியல் கட்டளைகளுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது என்று நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறிவிட்டபடியால், தலைமை நீதிபதியை சட்டப்படி பதவிநீக்க முடியாது என்று சட்டத்தரணி பொன்னுத்துரை கிரிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

பணிப் புறக்கணிப்பு போராட்டத்தையும் சட்டத்தரணிகள் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தபடியால், நாட்டின் சகல நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றிருக்கவில்லை.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.