ஷிராணிக்கு அச்சுறுத்தல்: சட்டத்தரணிகள் புகார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஜனவரி, 2013 - 13:02 ஜிஎம்டி
ஷிராணி பண்டாரநாயக்க (ஆவணப் படம்)

தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க (ஆவணப் படம்)

இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், குண்டர்களும் தலைமை நீதிபதியின் வீட்டுக்கு முன் ஆர்பாட்டம் நடத்தினாலும், அது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்று சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள்கூட தலைமை நீதிபதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர் என்பதும் தலைமை நீதிபதியின் பாதுகாப்பை பாதிக்கக் கூடியது என்று அவர் கூறினார்.

தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அது சட்ட ரீதியில் செல்லுபடியாகக்கூடியது அல்ல என்ற கருத்தையும் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ளது.

தலைமை நீதபதி பதவி விலகாவிட்டால், இராணுவத்தினரைப் பயன்படுத்தி அரசு அவரை விலக்கலாம் என்று தாம் அஞ்சுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

புதிய தலைமை நீதிபதி?

அதேநேரம் இலங்கையில் புதிய தலைமை நீதியரசர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதியின் மோஹான் சமரநாயக்க பிபிசி சந்தேஷியாவிடம் தெரிவித்தார்.

கண்டனத் தீர்மானத்தின்போது கட்சியின் நிலைப்பாட்டை மீறி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச ஜூரர்கள் சபை, காமன்வெல்த் செயலகம் போன்றவை தமது கண்டனத்தையும் கரிசனைகளையும் வெளிப்படுத்தியுள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.