தடுத்து வைக்கப்பட்ட யாழ் மாணவர்களில் இருவர் விடுதலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2013 - 10:44 ஜிஎம்டி
யாழ் பல்கலைக் கழகம்

யாழ் பல்கலைக் கழகம்

படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் இரண்டு பேர் இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வி.பவானந்தன், விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவன் எஸ்.சொலமன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கூறியிருககின்றார்.

வெலிககந்தை புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களைப் பொறுப்பேற்பதற்காக யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் மற்றும் முக்கிய பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் பெற்றோர்களுடன் அங்கு சென்றிருந்தனர்.

நம்பிக்கை

இந்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்னம் உறுதி செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிப்பதற்காகப் பல மட்டங்களிலும் பல தரப்பினருடனும் தொடர்பு கொண்டு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறிய அவர், இன்னும் தடுப்பில் உள்ள இரண்டு மாணவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்றும், சிறிடெலோ என்ற அரச ஆதரவு அரசியல் கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தினார்கள் என்றும் குற்றம் சுமத்தி நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததார்கள்.

இவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெனமேஜெயந் ஆகிய இருவருமே இன்னும் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலைய்ததில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.