இலங்கையில் புதிய அமைச்சரவை விரிவாக்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஜனவரி, 2013 - 11:00 ஜிஎம்டி
பெற்றோலிய வளத்துறை அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த இம்முறை அமைச்சரவை மாற்றத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக மாறியுள்ளார்.

பெற்றோலிய வளத்துறை அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்த இம்முறை அமைச்சரவை மாற்றத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக மாறியுள்ளார்.

இலங்கையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் மற்றுமொரு அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.

10 அமைச்சர்களும் 6 துணையமைச்சர்களும் செயற்திட்டங்களுக்கான இரண்டு அமைச்சர்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியுடன் பிரதமர் டி.எம். ஜயரட்ணவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர்கள் விபரம்:

சுசில் பிரேமஜயந்த- சுற்றுச்சூழல் அமைச்சர்

சம்பிக்க ரணவக்க- தொழிநுட்பம் மற்றும் அணுசக்தி அமைச்சர்

பவித்ரா வன்னியாராச்சி- மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

அனுர பிரியதர்ஷன யாப்பா- பெற்றோலியத் துறை அமைச்சர்

லக்ஷ்மன் செனவிரட்ன- சீனித் தொழிற்துறை அமைச்சர்

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

ஜயரட்ன ஹேரத்- தாவரவியல் பூங்கா மற்றும் பொது பொழுதுபோக்கு அமைச்சர்

துமிந்த திசாநாயக்க- கல்விச் சேவைகள் அமைச்சர்

பசீர் சேகு தாவூத்- உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர்

விஜித் விஜயமுனி சொய்சா - வனஉயிர்கள் பாதுகாப்பு அமைச்சர்

செயற்திட்டங்களுக்கான அமைச்சர்கள்:

ரோஹித்த அபேகுணவர்தன- துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள்

நிர்மலா கொத்தலாவல- துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள்

துணை அமைச்சர்கள்:

எஸ்.எம்.சந்திரசேன- பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர்

சுசந்த புஞ்சிநிலமே- பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர்

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா- பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சர்

ஃபைஸர் முஸ்தஃபா- முதலீட்டு ஊக்குவிப்பு துணை அமைச்சர்

ஏ.ஆர்.எம். அப்துல் காதர்- சுற்றுச்சூழல் துணை அமைச்சர்

சரத் குமார குணரட்ண- மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்து துணை அமைச்சர்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.