'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்': அழிந்துவரும் ஓர் அடையாளம்!

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 பிப்ரவரி, 2013 - 17:26 ஜிஎம்டி

தனது பேத்தியுடன் கொஞ்சும் கஃபீன் இனப் பெண்மணி ஒருவர்

'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்': பகுதி 1

'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடையாளம்!

இலங்கையில் சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் ஆப்பிரிக்க இனத்தவர்கள் பற்றி ஒரு பார்வை

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் சொற்ப எண்ணிக்கையில் வாழும் கஃபீர் இன மக்கள் குறித்து நமது சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கிய சிறப்பு பெட்டகத்தின் மூன்று பாகங்களையும் இங்கே கேட்கலாம்.

ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக இருக்கும் ஓர் இனம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

காலனிய நாடுகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிச் சென்று, தாம் ஆட்சி செய்த பிற நாடுகளில் பணியமயர்த்தியது வரலாற்றில் ஒரு கசப்பான உண்மை.

தனது விளையாட்டுத் தோழர்களுடன் சஜித்

'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்': பகுதி 2

இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்: ஆடவர் குறைவாக உள்ள ஒரு சமூகம்

இலங்கையில் மிகக் குறைவாகவுள்ள கஃபீர் சமூகத்தில் ஆடவர்கள் மிகக் குறைவாக உள்ளது அவர்களின் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அக்காலகட்டத்தில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து ஒரு தொகுதியினர் இலங்கைக்கும் அடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். அவர்களின் வம்சமே இந்தக் கஃபீர்கள்.

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மக்கள் வாழ்கிறார்கள். எனினும் இவர்கள் எந்த அளவுக்கு இலங்கைச் சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்கிற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.

அருகி வரும் இந்த மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் ஆழ்ந்த கவலைகள் எழுந்துள்ளன.

'இலங்கையில் ஆப்பிரிக்கர்கள்': பகுதி 3

கஃபீர் இன மக்களின் எதிர்காலம் என்ன ?

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வரும், கஃபீர் மக்களுக்கு எதிர்காலம் என ஒன்று உள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.