'முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் உணவு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2013 - 13:00 ஜிஎம்டி

இலங்கையில் முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹாலால் உணவுகளை விநியோகிப்பதற்கு ஏதுவான பொறிமுறை ஒன்றை கண்டறிவது என்று பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பில் முடிவு காணப்பட்டது.

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த முடிவு காணப்பட்டதாக முஸ்லிம் அமைப்புக்கள் கூறியுள்ளன.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் செவ்வி

ஹலால் உணவு குறித்த சந்திப்பு

ஹலால் முறைமை குறித்து இலங்கை பாதுகாப்புச் செயலருடனான சந்திப்பு பற்றி முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் கருத்து.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களிடம் இருந்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சில முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கை பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியுள்ளனர். இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், ஜமயத்துல் உலமா அமைப்பு ஆகியனவும் இதில் கலந்துகொண்டன.

இந்தப் பேச்சின் போதே ஹலால் முறைமை குறித்து பொதுபல சேனா என்னும் அமைப்பினால் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ஆராயப்பட்டிருக்கிறது.

இதன் முடிவாக, ஹலால் உணவுகளை ஏனைய சமூகத்தினருக்கு அல்லாமல் முஸ்லிம்களுக்கு மாத்திரம் விநியோகிக்கும் ஒரு பொறிமுறை குறித்து ஆராயுமாறு பாதுகாப்பு செயலர் ஜமயத்துல் உலமா அமைப்பை கூறியிருக்கிறார்.

இந்த விடயங்கள் குறித்து ஆராய்கின்ற அமைச்சர்களின் குழுவும் இந்தப் பொறிமுறை குறித்து ஆராயவுள்ளதாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரான என். எம். அமீன் அவர்கள் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.