'அனைத்து தமிழர் கொலை குறித்தும் சர்வதேச விசாரணை தேவை'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2013 - 13:39 ஜிஎம்டி
ஜெனிவாவில் டாக்டர். மனோகரன்

ஜெனிவாவில் டாக்டர். மனோகரன்

திருகோணமலையில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் ஏனைய அனைத்து தமிழர் கொலை குறித்தும் சர்வதேச விசாரணை தேவை என்று அந்தச் சம்பவத்தில் தனது மகனை இழந்த டாக்டர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டாக்டர் . மனோகரன் செவ்வி

'எனது மகனுக்கு நியாயம் தேவை'

திருகோணமலையில் 5 மாணவர்களில் ஒருவராக கொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி டாக்டர் மனோகரன் ஐநாவில் கோரிக்கை முன்வைத்தார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு 5 தமிழ் மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொலைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி டாக்டர் மனோகரன் அவர்கள் போராடி வருகின்றார்.

அவருடைய மகனான ரஜிகரும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

ஆயினும் இதுவரை அந்த கொலைகள் தொடர்பாக உரிய நீதி கிடைக்கவில்லை என்று கூறும் மனோகரன் அவர்கள், ஜெனிவாவில் நடக்கும் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கைக்கு எதிராக தனது கருத்துக்களை எடுத்துவைத்தார்.

இந்தக் கொலைகள் உட்பட, இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் குறித்து இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்று அங்கு பேசிய மனோகரன் அவர்கள், ஆகவே இது குறித்து சர்வதேச குற்றவிசாரணை ஒன்று தேவை என்று கூறினார்.

அவர் இது தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.