காமென்வெல்த் நாடுகளின் தூதர்களுடன் திமுக குழு பேச்சு

  • 24 ஏப்ரல் 2013

காமன்வெல்த் நாடுகளின் அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை திமுக கேட்டிருக்கிறது.

இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் சந்தித்து பேசியிருக்கின்றன.

இலங்கையில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று திமுக குழுவினர் அந்த நாடுகளின் தூதுவர்களைக் கேட்டுள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு மற்றும் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் இரு குழுவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது.

பல நாட்டு தூதர்களை சந்தித்து பேசியுள்ளது குறித்து திமுக நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி ஆர் பாலு பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.