மேலும் ஒரு தொகுதி இலங்கையரை ஆஸ்திரேலியா திருப்பி அனுப்பியுள்ளது

  • 26 ஏப்ரல் 2013

ஆஸ்திரேலியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

25க்கும் அதிகமானோர் அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அவர்களது கோரிக்கை தஞ்சம் வழங்குவதற்கு பொருத்தமானவை அல்ல என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.

அதேவேளை, ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தும் சில முகவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் இருந்து ஆட்கள் படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்வதற்கு இலங்கைப் படையின் சில பிரிவினர் உதவுவதாக வந்த தகவல்கள் குறித்து புலனாய்வு செய்யப்படுவதாக முன்னதாக சில செய்திகள் வந்திருந்தன. ஆனால், அப்படியான நடவடிக்கைக எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொலிஸாரும், கடற்படையினரும் மறுத்திருக்கிறார்கள்.