வடமேல் மாகாணசபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 52 இடங்களில் ஆளும் கட்சி (நேரடியாக 32 , 2 போனஸ்) 34 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 12 இடங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 3 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 23 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 இடங்களும், ஜனநாயகக்கட்சிக்கு 2 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் கிடைத்துள்ளன.

புத்தளத்தில் ஆளும் கட்சிக்கு 9 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 5 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும், ஜனநாயகக் கட்சிக்கு (சரத்பொன்சேகா கட்சி) 1 இடமும் கிடைத்துள்ளன.

குருநாகல் மாவட்ட வாக்கு விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 540,513 --- 69.05 % --- 23 இடங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி ---- 169,668 ----- 21.67 % ---- 7 இடங்கள்

ஜனநாயகக் கட்சி ----- 36,096 ----- 4.61 % ---- 2 இடங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ----- 17,130 ---- 2.19 % ---- 1 இடம்

மக்கள் விடுதலை முன்னணி ---- 16,311 ---- 2.08 % --- 1 இடம்

--------------------------------------------------------------------

புத்தளம் வாக்கு விபரம்:

ஐக்கிய மகள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 164,675 --- 59.10 %-- 9 இடங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி ----- 87,343 ---- 31.34 % ---- 5 இடங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ---- 10,730 ---- 3.85 % ---- 1 இடம்

ஜனநாயகக் கட்சி (சரத்பொன்சேகா கட்சி) --- 10,018 ---- 3.60 % ---- 1 இடம்