கூடுதல் இடங்கள் மலையக மக்களுக்கு நன்மை பயக்குமா?

கூடுதல் இடங்கள் மலையக மக்களுக்கு நன்மை பயக்குமா?

இலங்கையின் மத்திய மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில், கடந்த முறையைவிட இம்முறை தமிழ்க் கட்சிகள் கூடுதல் இடங்களை வென்றுள்ளன.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தலைமையிலான கட்சிகள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்ட போதிலும், இம்முறை தமிழர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.

எனினும், மாகாண சபையில் கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது, மலையகத்தில் வாழும் லட்சக் கணக்கான தமிழ் மக்களுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழ்க் கட்சிகள் பெற்றுள்ள வெற்றிகள், மலையக மக்களின் பிரச்சினைகள் ஆகியவை குறித்து கண்டியிலிருந்து செயல்படும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குநர் முத்துலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.