காமன்வெல்த் மாநாடு : 'தமிழ் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு'

பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் தான் பங்கேற்பது குறித்த எந்த முடிவும் தமிழ் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேற்று திங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்து இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட உள்நாட்டு போரின்போது ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமான இலங்கை அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற தமிழகத்தின் ஒருமித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்கவேண்டும் எனக்கோரியதாகவும், கடந்த 12 நாட்களுக்கு மேல் இதே பிரச்சினைக்காக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அவரது உடல் நிலை நலிந்து வருகிறது என எடுத்துக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையிலேயே பிரதமர் தமிழ் மக்கள் மற்றும் திமுகவின் இவற்றைக் கருத்தில் கொண்டே காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தச் செய்தி குறித்து மேலும்