சர்வதேச ஊடக சம்மேளனப் பிரதிநிதிகளை இலங்கையை விட்டு வெளியேற உத்தரவு

இலங்கை குடிவரவு அதிகாரிகளால் நேற்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சர்வதேச செய்தியாளர் சம்மேளனத்தின் இரு செயற்பாட்டாளர்களையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் 7 ஊடக அமைப்புக்கள் சேர்ந்து நடத்திய சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்தபோது சர்வதேச செய்தியாளர் சம்மேளனத்தின் இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் (இவர்கள் இருவரும் வெளிநாட்டவர்கள்) இலங்கை குடிவரவு அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

உல்லாசப் பயணிகளுக்கான விசாவில் இலங்கைக்கு வந்த அவர்கள், அதற்கான விதிமுறைகளை மீறி இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக குற்றஞ்சாடப்பட்டுள்ளது.

அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்த சுதந்திர ஊடக இயக்கத்தின் சுனில் ஜயசேகர புலனாய்வாளர்களால் இரவுவரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்