காமன்வெல்த் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்குகிறது

Image caption காமன்வெல்த் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்குகிறது

காமன்வெல்த் அமைப்பு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் சந்திக்கிறார்கள்.

காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் உச்சிமாநாடு வெள்ளிக்கிழமை தொடங்குவதற்கு முன்னதாக இந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது.

இது வரை, இந்த உச்சிமாநாட்டை,மொரிஷியஸ்,கனடா மற்றும் இந்தியப் பிரதமர்கள் புறக்கணித்துள்ளனர்.

இலங்கையின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்த சர்ச்சை தொடர்பாகவே இவர்களின் இந்தப் புறக்கணிப்பு நடந்திருக்கிறது.

இலங்கை, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில் பரவலான மனித உரிமை துஷ்பிரயோகங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு பலமாக மறுத்து வந்துள்ளது.