ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முத்தையா முரளிதரன் கருத்துகள்:மனோ கணேசன் கண்டனம்

Image caption ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்த சில கருத்துக்கள் கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

நாட்டில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் குறித்து, அரசுக்கு சாதகமான வகையில் முரளிதரன் கூறியுள்ளது மிகவும் தவறானது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இலங்கை சென்றபோது அரசு மீது சில கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

Image caption பிரிட்டிஷ் பிரதமருடன் டேவிட் கேமரன்

ஆனால் கேமரனை சந்தித்து அவருடன் கிரிக்கெட்டும் விளையாடிய முரளிதரன், வடக்கே பிரிட்டிஷ் பிரதமர் சென்றபோது சில பெண்கள் ஒன்றுகூடி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது நாட்டிலுள்ள மொத்த நிலையையும் வெளிப்படுத்துவதாகாது என்று பொருள்படும் ரீதியில் தெரிவித்த கருத்துக்களே இப்போது கண்டனங்களை தோற்றுவித்துள்ளன.

இலங்கையில் போர் காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் பலர் காணாமல் போனது, கடத்தப்படுவது, மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் போன்ற பிரச்சினைகள் சர்வதேச அளவில் விவாதிக்கப்படும்போது, இலங்கையில் நிலமைகள் சுமுகமாக இருப்பது போன்று முரளிதரன் கருத்து கூறியிருப்பதை கண்டிக்கும் மனோ கணேசன், அவர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.