இலங்கை படையினருக்கு பட்டப்படிப்பு வழங்க ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா
Image caption தமிழக முதல்வர் ஜெயலலிதா

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படை தொழில்நுட்ப பட்டப்படிப்பை வழங்குவதற்கான திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடுமையான ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள ஜெயலலிதா அவர்கள், இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்குவது என்று இந்தியக் கடற்படை உயர் அதிகாரி இலங்கைக்கு வழங்கியுள்ள வாக்குறுதியானது, இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கும், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் தமிழக மீனவர்களுக்கும் எதிரானது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைக்கும் கொள்கையை இந்தியா கையாண்டு வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்குவதை நிறுத்துமாறு இந்திய இராணுவ அமைச்சகத்துக்கு, அரசாங்கம் உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் இந்தியப் பிரதமரைக் கேட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படையின் தலைமை கட்டளை அதிகாரியான டி. கே. ஜோஷி அவர்கள், இந்தியாவில், இலங்கை கடற்படையினருக்கு 4 ஆண்டுகால தொழில்நுட்ப பட்டப்படிப்பை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்