இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஐ.சி.ஆர்.சி ஆய்வு

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஐசிஆர்சி ஆய்வு படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ஐசிஆர்சி ஆய்வு

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றை தாம் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடனேயே இதை தாம் செய்வதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்த மதிப்பீடானது காணாமல் போனவர்கள் குறித்த முடிவு தெரியாமல் இன்னமும் தொடரும் சம்பவங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உதவும் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

16,000 இற்கும் அதிகமான காணாமல் போன சம்பவங்கள் குறித்த பதிவுகள் தம்வசம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஒரு சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.