ஜெயக்குமாரி கைது நடவடிக்கையைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

கவனயீர்ப்பு போராட்டம் பேருந்து நிலையத்தில் நடந்தது
Image caption கவனயீர்ப்பு போராட்டம் பேருந்து நிலையத்தில் நடந்தது

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனின் விடுதலை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பேருந்து நிலையம் முன்பாக நடந்துள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயகுமாரியின் மகள் விபுசிகா பாலேந்திரன் சிறார் நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியோரது ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடந்துள்ளது.

Image caption பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

வடமாகாண சபை அமைச்சர்களும், உறுப்பினர்களும், கட்சிப் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சட்ட விரோத கைதுகளை நிறுத்தக் கோரியும், இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேறச்சொல்லியும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் சுலோகங்களை கையிலே தாங்கியிருந்தனர்