கைதான மனித உரிமை செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய சர்வதேச கோரிக்கை

ருக்கி பெர்ணாண்டோ
Image caption ருக்கி பெர்ணாண்டோ

இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அனுசரணையாக செயற்பட்டு வந்த இரு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு மனித உரிமைக் குழுக்கள் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளன.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் ஆசியா ஃபோரம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தக் கைதை ஒரு எதேச்சதிகாரமான கைது மற்றும் விமர்சனங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என்று விபரித்துள்ளன.

இவர்கள் இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ருக்கி பெர்ணாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் மீது இன்னமும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை.

இலங்கையின் வடபகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.