இலங்கை மீதான ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

படத்தின் காப்புரிமை UNHRC
Image caption ஐநா மனித உரிமைகள் பேரவை

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது.

இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது.

இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன.

12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.

இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது.

பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் கூறியது.

அதனால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.

ஆனால், பொதுவான பட்ஜெட்டிலிருந்து இலங்கை விவகாரத்துக்கான தனியான நிதி ஒதுக்கப்படும் என்று ஆணையத்தின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கையை ஏற்க முடியாது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியது. வாக்களிப்பின் மூலமே நாடுகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா கூறியது.

மற்ற இணை அனுசரணை நாடுகளும் நிதிவளம் இல்லை என்ற வாதத்தை எதிர்த்துக் கருத்து வெளியிட்டன.

இறுதியாக தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தச் செய்தி குறித்து மேலும்