வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்

படத்தின் காப்புரிமை BBC World Service

ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இருந்து தாம் விலகி இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

வாக்கெடுப்புக்கு முன்னதான விவாதத்தின் போது உரையாற்றிய, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இந்தியத் தூதுவர், இந்த தீர்மானம் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக அதனை சிக்கலாக்கிவிடும் என்பதால், இதற்கான வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகி இருப்பது என்று தீர்மானித்துள்ளதாகக் கூறினார்.