'ஆணையர் விசாரிக்கவுள்ளது வரவேற்கத்தக்கது' - பிரித்தானிய தமிழர் பேரவை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஆணையர் விசாரிக்கவுள்ளது வரவேற்கத்தக்கது' - பிரித்தானிய தமிழர் பேரவை

இலங்கை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திபடி ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பார் என்று கூறப்பட்டுள்ள விடயம் வரவேற்கத்தக்கது என்று இந்த தீர்மானம் தொடர்பில் பிரச்சாரங்களை செய்து வந்த அமைப்புக்களில் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவை கூறியுள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜெனிவாவில் இருந்து அது குறித்து கருத்து தெரிவித்த பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளரான ராஜ் குமார் அவர்கள், இறுதி நேரத்தில் பலவிதமான தடைகளைத் தாண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.

இந்தியாவில் தற்போது தேர்தல் ஒன்று நடக்கும் நிலையில், அங்கு காபந்து அரசாங்கம் போன்ற ஒன்றே ஆட்சியில் இருப்பதால்தான், இந்தியா இந்த விடயத்தில் உரிய முடிவை எடுக்க முடியாமல் போனதற்கான காரணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ராஜ் குமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.