வெளிநாட்டு தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை

பிரித்தானிய தமிழர் மன்றத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை tamilsforum.co.uk
Image caption பிரித்தானிய தமிழர் மன்றத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள 16 தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

"வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்" என இலங்கை அரசு இந்த அமைப்புகளை வர்ணித்துள்ளது.

இந்த அமைப்புகளுடன் இலங்கைப் பிரஜைகள் எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசு நிபந்தனை விதித்துள்ளது.

ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமல்லாது, ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, நோர்வே போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு தற்போது புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஐநா பாதுகாப்பு சபை கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில், சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாக இந்த அமைப்புகளுக்கு தாம் தடை விதித்துள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பெயர்கள் பின்வருமாறு:

1. தமிழீழ விடுதலைப் புலிகள் 2. தமிழர் புனர்வாழ்வு அமைப்பு 3. தமிழர் ஒருங்கிணைப்பு குழு 4. பிரித்தானிய தமிழ் மன்றம் 5. உலகத் தமிழ்இயக்கம் 6. கனேடிய தழிழ் காங்கிரஸ் 7. ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் 8. உலகத் தமிழ் மன்றம் 9. கனேடிய தமிழர்களுக்கான தேசியப் பேரவை 10. தேசிய தமிழ்ப்பேரவை 11. தமிழ் இளைஞர் அமைப்பு 12. உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு 13. தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் 14. தமிழீழ மக்கள் கூட்டம் 15. உலகத் தமிழர் நிவாரண நிதியம் 16. தலைமை காரியாலய குழு