பொதுபல சேனா பிக்குகள் ஆறு பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்
Image caption நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்

புனித குரானுக்கு அவமதிப்பு ஏற்படுத்தியது, ஜாதிக பலசெனா அமைப்பு அண்மையில் நடத்திய உடக சந்திப்பு ஒன்றுக்கு இடையுறு ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் போதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் உட்பட ஆறு பிக்குகளை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய சம்பந்தப்பட்ட பிக்குகள் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நீண்ட விசாரணையின் பின்பு சந்தேக நபர்களான பிக்குகளை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு நிதிபதி உத்தரவிட்டதாக பிரதி போலிஸ் மா அதிபர் அனுரா சேனாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

"மதங்களுக்கு எதிராக தாகுதல்களை மேற்கொள்ளும் குழுக்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த நாம் தயங்க மாட்டோம். பவுத்த, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமுகத்தில் கூட மதங்களுக்கிடையே முறுகல் நிலைகளை ஏற்படுத்தும் குழுக்கள் இருக்கின்றன. இவர்களுக்கு எதிராக முறைபாடுகள் சமர்பிக்கப்பட்டால் அதனை விசாரணை செய்வதற்கும் நாம் தயங்க மாட்டோம்." என பிரதி போலிஸ் மா அதிபர் அனுரா சேனாநாயக்க தெரிவித்தார.

பிணையின் கீழ் விடுதலை செய்யப்பட கல்கோட அத்தே ஞானசார தேரர், போலீசார் எமக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தியிருந்தாலும், பவுத்த மதத்திற்கு எதிராக செயற்படும் அமைச்சர் ரிஷாத் பதயுதினுக்கு எதிராக சட்டம் ஏன் செயல்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

தமக்கு எதிராக எந்த விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சிங்கள பவுத்த மக்களுக்கு எதிராக செயற்படும் குழுக்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஒன்பதாம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.